Just Dial Ltd அறிவித்த அதிரடி ஆஃபர்! – முழு விவரம் இதோ!


பிரபல இணைய தொழில்நுட்ப நிறுவனமான Just Dial Ltd தொலைபேசி, வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளில் இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கான உள்ளூர் தேடலை வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது டேக் ஓவர் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Just Dial Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர், 5, 2021. மாற்றிய பின், வாடிக்கையாளர்கள் தங்களது பங்குகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பங்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 6, 2021. பங்குகளை சரிபார்த்த பின்பு, இறுதிப் பட்டியல் பங்குச் சந்தைகளுக்கு வழங்கப்படும். சரிபார்ப்புகள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பிறகு பரிவர்த்தனைக்கான ஒப்பந்தக் குறிப்பு வழங்கப்படும். இந்த நடைமுறைகளுக்குப் பிறகு அதற்குரிய பணத்தை அக்டோபர், 22, 2021 அன்று பெற்றுக்கொள்ளலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *