Tag: India

  • ரூ.887 கோடி.. மத்திய அரசுக்கு செலுத்திய பவர் ஃபைனான்ஸ்..!!

    Power Finance Corporation –ன் CMD ரவீந்தர் சிங் தில்லான், மற்றும் மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் இடைக்கால ஈவுத்தொகை, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் Don’t Worry.. GDP 7.8% அதிகரிக்கும்..!!

    கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.

  • BharatPe நிர்வாக இயக்குநர் அஷ்னீர் ராஜினாமா – முடிவை எட்டியது நாடகம்..!!

    சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.

  • 8,337 காரட் கச்சா வைரம் – மின் ஏலத்தில் விற்பனை..!!

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவில் NMDC தனது வைரச் சுரங்கத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த வைர வளத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகும். மஜ்கவான் பன்னாவில் உள்ள என்எம்டிசியின் வைரச் சுரங்கத் திட்டம் நாட்டிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கமாகும்.

  • அமேசான் பங்குகள் விற்பனை.. 10 பில்லியன் டாலர் வரை திரும்ப வாங்க திட்டம்..!!

    Amazon.com Inc. தனது பங்குகளை முதல் முறையாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் நான்கு இலக்க பங்கு விலைகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.

  • இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பு.. IMF எச்சரிக்கை..!!

    சர்வதேச நாணய நிதியம் என்று அழைக்கப்படும் IMF-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

  • தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பு.. விலை ஏறுனாலும் ஆச விடலையே..!!

    இதுகுறித்து GJEPC-யின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது, கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா முழுமையாக முடிவடையாத காலத்திலும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், அதன்படி, 1,067.72 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  • முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.. கொட்டு வாங்கிய SEBI..!!

    நிதி மோசடி புகார்கள் காரணமாக சகாரா பரிவார் குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் சகாரா குழுமத்தில் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

  • பங்குச் சந்தை மாறுபாடு – ஐபிஓக்கள் இழுபறி..!!

    சந்தை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 51 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.77,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக ’பிரைம் டேட்டாபேஸ்’ தெரிவித்துள்ளது. இதில் இந்திய அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உட்பட 44 நிறுவனங்கள் இல்லை

  • ஏற்றுமதி பாதிக்கும்.. – பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!

    உக்ரைன் மீது போர் தொடுத்துள் ளரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.