ரூ.887 கோடி.. மத்திய அரசுக்கு செலுத்திய பவர் ஃபைனான்ஸ்..!!


பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்  2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக நிறுவனம் ரூ.887 கோடியை  மத்திய அரசுக்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளது.

Power Finance Corporation –ன் CMD ரவீந்தர் சிங் தில்லான், மற்றும் மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் இடைக்கால ஈவுத்தொகை, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் ஃபைனான்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகை ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூ. 6. வழங்குவதாக 2022 பிப்ரவரி 11 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 2021-22 நிதியாண்டில் பி.எஃப்.சி.  2021-22 நிதியாண்டில் அதன் பங்குதாரர்களுக்கு ரூ.2,838 கோடி இடைக்கால ஈவுத்தொகையை ரூ.10.75 என்ற ஈக்விட்டி பங்கின் முகமதிப்பில் செலுத்தியதாக தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *