-
இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…
இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும்…
-
ட்ரோன் பயன்பாட்டு நெறிமுறைகள்
தடுப்பூசி விநியோகம், எண்ணெய் குழாய்கள், வெட்டுக்கிளி எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு ட்ரோன் சேவைகளை அண்மைக்காலமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது. ஆனால் ட்ரோன்களின் சேவை வழங்குநர்கள், ட்ரோன் விதிகள், 2021 உடன் இணங்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 25, 2021 அன்று அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், அதன் வணிகப் பயன்பாட்டிற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது. இந்த வகை சான்றிதழ், ட்ரோன்களின் பதிவு மற்றும் செயல்பாடு, வான்வெளி கட்டுப்பாடுகள், ஆராய்ச்சி, மேம்பாடு…
-
ஏவுகணை வீசும் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா !
அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை பயன்பாட்டிற்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை வாங்க உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆளில்லா சிறிய விமானங்களை வாங்குவதற்கான பரிந்துரைக்கு, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களிலிருந்து ஏவ முடியும். நடப்பு நிதியாண்டிலேயே இந்த கொள்முதல் நிறைவேற்றப்படும். ராணுவம்,…