ட்ரோன் பயன்பாட்டு நெறிமுறைகள்


தடுப்பூசி விநியோகம், எண்ணெய் குழாய்கள், வெட்டுக்கிளி எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு ட்ரோன் சேவைகளை அண்மைக்காலமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது.

ஆனால் ட்ரோன்களின் சேவை வழங்குநர்கள், ட்ரோன் விதிகள், 2021 உடன் இணங்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 25, 2021 அன்று அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், அதன் வணிகப் பயன்பாட்டிற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது.

இந்த வகை சான்றிதழ், ட்ரோன்களின் பதிவு மற்றும் செயல்பாடு, வான்வெளி கட்டுப்பாடுகள், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ட்ரோன்களின் சோதனை, பயிற்சி மற்றும் உரிமம், குற்றங்கள் மற்றும் அபராதங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

ட்ரோன்கள் விதிகள், 2021 இன் படி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சோதனை நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை தவிர, ஒவ்வொரு ட்ரோனும் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (UIN) இருக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *