-
₹96.55 இல் இருந்து ₹342.95 ஆக உயர்ந்துள்ள Faze Three Ltd (FTL) பங்குகள்
Faze Three Ltd (FTL) என்பது ஸ்மால் கேப் நிறுவனமாகும், இதன் சந்தை மூலதனம் ₹834.02 கோடி. இந்தியாவில், இந்நிறுவனம் தற்போது வீட்டு ஜவுளி மற்றும் வாகனத் துணிகள் தயாரிப்பதில் நன்கு அறியப்பட்ட நிறுவனமாக உள்ளது. இந் நிறுவனத்தின் பங்குகள் மே 24, 2021 அன்று ₹96.55 இல் இருந்து ₹342.95 ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்தில் மல்டிபேக்கர் வருவாயான 255.20 சதவீதத்தைக் குறிக்கிறது. மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான…
-
ரூ.6,000 கோடி பங்கு வெளியீடு.. SEBIயின் அனுமதிக்கு காத்திருக்கும் Ebix CASH..!!
அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டிருக்கும் Ebix நிறுவனத்தின் இந்திய துணைநிறுவனம் Ebix CASH. இது ரூ.6,000 கோடி பொதுப்பங்குகளை வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
-
மூன்றாம் காலாண்டில் வங்கிகளின் பங்கு மதிப்பு அதிகமாகும் – நிபுணர்கள் கணிப்பு !
டிசம்பர் காலாண்டில் வசூல் மற்றும் சொத்துத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வணிக வளர்ச்சியிலும் வங்கிகள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் பற்றிய நிர்வாக விளக்கவுரை மற்றும் தரவு ஆகியவை கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தோற்றம் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தான அதிகரிப்பு ஆகியவை கடன் வழங்குபவர்களுக்கு மார்ச் காலாண்டில் வேகத்தைத்…
-
LIC – IPO – சில குறிப்புகள் !
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.
-
ஒருங்கிணையும் ஸ்ரீராம் நிறுவனங்கள், அறிமுகமாகிறது சூப்பர் ஆப் !
வங்கிசாரா நிதிக் குழுமமான ஶ்ரீராம் நிறுவனம், தனது நிதிச் சேவைகளை வழங்கும் பட்டியலிடப்படாத ஶ்ரீராம் கேப்பிட்டல் லிமிடெட், ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து நாட்டின் மிகப்பெரிய சில்லறை வங்கிசாரா நிறுவனத்தை உருவாக்க உள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குழுமத்தில் பட்டியல் இடப்படாத முதலீட்டு நிறுவனமான பிரமல் குழுமமும், அமெரிக்காவின் தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி கேப்பிடல் நிறுவனமும்…
-
சுப்ரியா லைஃப் சயின்ஸ் – IPO !
ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளரான சுப்ரியா லைஃப் சயின்ஸ் தனது முதல் பொதுச் சலுகையை டிசம்பர் 16, 2021 அன்று அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகை டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடையும். நிறுவனம் வரும் திங்கட்கிழமை அன்று அதன் விலை மற்றும் லாட் அளவு விவரங்களை வெளியிடும். நிறுவனம் தனது பொது வெளியீட்டின் மூலம் ரூ. 700 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது, அதில் ரூ. 200 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிதாக வெளியிடுவது மற்றும்…
-
IPO வுக்குத் தயாராகும் நவி !
இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2021ல் லாபமீட்டியது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ஐபிஓ வெளியிட ஆயத்தமாக்கி வருகிறார் சச்சின். ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், போஃபா செக்யூரிட்டிஸ் மற்றும் கிரெடிட் சூய்ஸி ஆகியவை ஆலோசகர்களாக வந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும்…