Tag: Tea

  • ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

    அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…

  • சர்வதேச காஃபி விலை உயர்வு எதிரொலி ! பிரேசிலை விட்டு ஆப்பிரிக்காவுக்குத் தாவும் வணிகர்கள் !

    கப்பல் போக்குவரத்து கட்டண விலை உயர்வு, உர விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட பிரச்சனைகளால் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காஃபி விலையை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது பிரேசில். மார்ச் மாதம் டெலிவரியான அராபிகா காஃபி கொட்டையின் விலை நியூயார்க்கில் ஒரு பவுண்ட் 2.23 டாலராக உயர்ந்தது, இது அக்டோபர் 2014 பிறகு உச்ச பட்ச விலையாகும். அராபிகா காபி கொட்டையின் விலை கடந்த ஆண்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.…

  • டீ விற்பனையில் இருந்து வெளியேறும் டாடா !

    டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில் 4 டீ விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக திறந்தது. அதற்கு “டாடா ச்சா” என்றும் பெயரிட்டது. யார் கண் பட்டதோ என்னவோ அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது, ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல…