-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.
-
1.59 டிரில்லியன் வரி திருப்பி செலுத்தப்பட்டது – வருமான வரித்துறை
ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.
-
ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மைக்ரோசாஃப்ட் மீது உலக வங்கித் தலைவர் விமர்சனம் !
மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
-
அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?
ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள்…
-
முன்னணி IT நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு !
ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.
-
19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
-
2022 இல் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் – சர்வதேச தொழிலாளர் அமைப்பு !
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது 2019 ஐ விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2022 இல் பணிபுரிந்த மொத்த மணிநேரம் அவர்களின் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட 2% அல்லது 52 மில்லியன் முழுநேர சமமான வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது