Category: தொழில்துறை

  • எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !

    இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Q3 இல் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்யவிருக்கும் இந்திய IT நிறுவனங்கள் !

    இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையின் (Information Technology) அக்டோபர்-டிசம்பர் (Q3) காலாண்டு வளர்ச்சி குறைந்து இருக்கிறது, ஏனெனில் அதன் பெரும்பான்மை சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணிநீக்கங்கள் தாராளமாக உள்ளன. ஆனால் நிதியாண்டு 22 இன் மூன்றாவது காலாண்டு இதற்கு விதிவிலக்காக இருக்கும், அதிகரித்த பணியமர்த்தல், சம்பள உயர்வு மற்றும் குறைந்த வேலை நாட்கள் ஆகியவை துறையின் வளர்ச்சியை பாதிக்கலாம், மேலும் பல ஆய்வாளர்கள் டாலருடன் ஒப்பிடும்போது ரூபாய் வீழ்ச்சிக்கு இது உதவலாம் என்று கூறுகின்றனர்.

  • இனி வாட்சப் வழியாகவும் செபியின் (SEBI) சம்மன் வரலாம் !

    இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.

  • 05/01/2022 – 60,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 60,008.88 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 66.05 புள்ளிகள் அதிகரித்து 59,921.98 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 14.84 புள்ளிகள் அதிகரித்து 17,820.10 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 103.40 புள்ளிகள் அதிகரித்து 36,943.55 ஆக வர்த்தகமானது.

  • 2021 – இந்திய சாலைகளை ஆட்சி செய்த மாருதி சுசூகி !

    மாருதி சுஸுகி, 2021 காலண்டர் ஆண்டில் நிறுவனத்தின் 10 சிறந்த மாடல்களில் எட்டு மாடல்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சாலைகளைத் தொடர்ந்து ஆட்சி செய்கிறது. 2020 ஆம் ஆண்டில் உள்ளூர் சந்தையில் மிகவும் பிரபலமான முதல் 10 வாகனங்களில் ஏழு மாருதி சுஸுகி குடும்பத்தைச் சேர்ந்தது. 2013 ஆம் ஆண்டில் பெஸ்ட் செல்லர் பட்டியலில் நிறுவனத்தின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. மாருதி சுஸுகிக்கு விருப்பமான வாடிக்கையாளர்கள் இருக்கும் இந்தியாவில் வேகன்ஆர் 2021 ஆம் ஆண்டில் 1,83,851…

  • ONGC – முதல் பெண் இயக்குனராக அல்கா மிட்டல் !

    ONGCயின் முதல் பெண் இயக்குநராக அல்கா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிட்டலுக்கு, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தெரிவித்தார்

  • 2022 – அதிகரிக்கும் FMCG பொருட்களின் விலை !

    இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

  • 2022 ஆம் ஆண்டில் ஆடை விற்பனைத் துறை எப்படி இருக்கும்?

    ஆடை விற்பனைத் துறை முதலீட்டாளர்கள் 2021 ஆம் ஆண்டில் சிறப்பான லாபம் ஈட்டியுள்ளனர், ட்ரெண்ட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட், வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட் மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் கடந்த ஆண்டு 45-65% என்ற அளவில் அதிகரித்தன. இது நிஃப்டி 500 குறியீட்டோடு ஒப்பிடும்போது 30%, சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தபோதும், இயல்பான நிலை ஏற்பட்டவுடன், சில்லறை விற்பனைப் பங்குகளுக்கான குறியீடு உயர்ந்ததாக இருந்தவுடன், வலுவான தேவை மீட்புக்கான நம்பிக்கைகளோடு…

  • 04/01/2022 – 60,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.

  • உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

    அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…