Category: தொழில்துறை

  • பங்குச் சந்தை ஒரு கழுகுப் பார்வை !

    பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரத்தில் சுமார் 1300 புள்ளிகள் உயர்ந்து 58,700 க்கு மேல் இருந்தது. நிஃப்டி 50 ஏறத்தாழ 330 புள்ளிகள் வரை உயர்ந்து 17500 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. சந்தையின் எழுச்சிக்கு எஃப்எம்சிஜி, ஆற்றல், உலோகம் ஆகியவைதான் காரணம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். டிசம்பர் 10 உடன் முடிவடைந்த இரண்டாவது வாரத்தில் சந்தை தொடர்ந்து வெற்றிப் பாதையை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்தது. புதிய கோவிட் நோய்த்தொற்றை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில்…

  • இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை உயர்த்தும் LIC !

    இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம்…

  • அதிகரிக்கும் திவால் வழக்குகள் ! செப்டம்பரில் மட்டும் 144 வழக்குகள் !

    திவால் நடவடிக்கை மீதான ஒரு வருட கால தடை மார்ச் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் 285 நிறுவனங்களை திவால் தீர்ப்பாயங்களுக்கு கடன் வழங்குநர்கள் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் காலாண்டில் மட்டும், 144 நிறுவனங்கள் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) பெஞ்ச்களுக்குத் அனுப்பப்பட்டன. இந்திய திவால்நிலை மற்றும் திவால்நிலை வாரியத்தின் (IBBI) தரவுகள், திவால் நடவடிக்கைகளுக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 4,708 என்று தெரிவிக்கின்றன. எவ்வாறாக…

  • IPO – வில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இதையெல்லாம் மனசுல வையுங்க !

    இந்தியப் பங்குச் சந்தை 2021 ஆம் ஆண்டில் இதுவரை 40க்கும் மேற்பட்ட IPO க்களைக் கண்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இது இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் இங்கிலாந்தின் பங்குச் சந்தையை நாம் கைப்பற்றி விடலாம் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருந்தாலும் IPO வை வாங்கும் முன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன், அளவைப் பொருட்படுத்தாமல்…

  • IPO வுக்குத் தயாராகும் நவி !

    இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2021ல் லாபமீட்டியது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ஐபிஓ வெளியிட ஆயத்தமாக்கி வருகிறார் சச்சின். ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், போஃபா செக்யூரிட்டிஸ் மற்றும் கிரெடிட் சூய்ஸி ஆகியவை ஆலோசகர்களாக வந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும்…

  • ஹெச்பி அட்ஹெஸிவ் IPO !

    ஹெச்பி அட்ஹெசிவ் நிறுவனம் ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் காலம் டிசம்பர் 15 முதல் 17 வரை. இந்த டிசம்பரில் வெளியாகும் 10வது ஐபிஓவாக இது இருக்கும். புதிய வெளியீடு 41.4 இலட்சம் பங்குகளாக இருக்கும். ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 4.57 பங்குகள் ஆஃப் லோடிங் பங்குகளாக இருக்கும். இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மகாராட்டிரா மாநிலம் நரங்கியில் உள்ள நிறுவனத்தில் தற்போதைய வசதிகள், மற்றும் கூடுதல் யூனிட்டில் உள்ள உற்பத்தி திறனை விரிவாக்கம்…

  • டேட்டா பேட்டர்ன் IPO !

    டேட்டா பேட்டர்ன் நிறுவனம் 240 கோடி ரூபாயை திரட்டுவதற்காக ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 5.95 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது டேட்டா பேட்டர்ன் என்பது பாதுகாப்பு மற்றும் விண்வெளி மின்னணு தீர்வுகள், செயலிகள்,சக்தி, ரேடியோ அலைவரிசைகள் மற்றும் மைக்ரோவேவ் பொதியப்பட்ட மென்பொருள் போன்ற சேவைகளை தன்னகத்தே கொண்ட நிறுவனமாகும். டேட்டா பேட்டர்ன் பங்குகள் டிசம்பர் 14 ந் தேதி ஆரம்பித்து, 16ந் தேதி முடிவடைகிறது. பங்கு விற்பனையின் விலையும், வாங்கும் அளவு…

  • வங்கி டெபாசிட் முதலீடுகளில் அதிக லாபமடைவது எப்படி?

    கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது உள்ள நிலையைப் பேணியுள்ளது. முடிந்த இரண்டு வாரங்களில் எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதியன்று ரெப்போ…

  • பயோகான் பயோலாஜிக்ஸ் – மைலன் பயோசிமிலர் இணைப்பு?

    பயோகான் பயோலாஜிக்ஸை, மைலனின் பயோசிமிலருடன் இணைப்பதற்காக மைலனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது பயோகான் நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைக்கப்பட்ட நிறுவனம் ஐபிஓ மூலம் 10 மில்லியன் டாலர்களை திரட்ட எண்ணியுள்ளது. பயோகான் மற்றும் மைலான் ஆகியவை தங்கள் பயோசிமிலர் வணிகங்களை இணைத்து ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன, பயோகான் பயலாஜிக்ஸ் என்பது பயோகானின் துணை நிறுவனமாகும். இதில் தடுப்பூசி கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 4.9 பில்லியன் டாலர் பண மதிப்பீட்டில் 15…

  • இந்தியாவின் இரண்டு வகைப் பொருளாதாரம் !

    இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது. பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின் விளைவு ஆகும். காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதால், பொருளாதார இருமைவாதம் வெளிப்படையாக பல பரிமாணங்களை கொண்டுள்ளது. வீட்டு உபயோகம் பற்றிய 2017-18ம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் கசிந்த தகவல்கள் அடிப்படையில், கிராமப்புற…