DCM shriram industries ட்ரோன்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்


டிசிஎம் ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ், ஆளில்லா விமானங்களை உருவாக்கி தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது என்று அதன் இணைத் தலைவர் ருத்ரா ஸ்ரீராம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

ட்ரோன்களை முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக ஸ்ரீராம் எடுத்துரைத்தார்.

ஸ்ரீராம் நிறுவனம் டெல்லியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) வசதியைக் கொண்டிருப்பதையும், இந்தியாவில் பாதுகாப்பு ஆளில்லா விமானங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது என்பதையும் வெளிப்படுத்தினார்.

தற்போது சோதனை கட்டத்தில் தயாரிப்பு இருப்பதாக ஸ்ரீராம் கூறினார். இந்திய பாதுகாப்புப் படைகளிடம் இருந்து இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் பெறவில்லை என்றும் ஸ்ரீராம் தெளிவுபடுத்தினார்.

கடந்த ஆண்டு, துருக்கிய ட்ரோன் நிறுவனமான Zyrone Dynamics இல் 30% பங்குகளை வாங்க $1 மில்லியன் முதலீட்டினை DCM ஸ்ரீராம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *