கடுமையாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலையை ₹20 லிருந்து 25க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ₹14 லிருந்து 18க்கும் குறைவாகவும் விற்பனை செய்வதாக ஜியோ-பிபி மற்றும் நயாரா எனர்ஜி போன்ற தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், எண்ணெய் அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளன.

தனியார் நிறுவன விற்பனை நிலையங்களில் அதிக விலை மற்றும் சில விற்பனைக் குறைப்பு ஆகியவை சமீபத்திய நாட்களில் பொதுத்துறை (PSU) பெட்ரோல் பம்புகளில் கடுமையான நெரிசலுக்கு வழிவகுத்தன.

தனியார் நிறுவனங்கள் செயல்பாடுகளை குறைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஜூன் 17 அன்று, அரசாங்கம் உலகளாவிய சேவை கடமையின் (USO) நோக்கத்தை விரிவுபடுத்தியது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தபட்ச வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்ட வேலை நேரம், குறிப்பிட்ட தரம் மற்றும் அளவு, முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளைகளை பராமரிப்பது போன்றவைகள் USO களில் அடங்கும் என்றும் விதிமுறைகளை மீறுவது உரிமங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது மத்திய அரசு குறிப்பிடும் பெட்ரோல் மற்றும் டீசலின் குறைந்தபட்ச இருப்பு நிலைகளை பராமரித்தல்; தேவைக்கேற்ப எந்தவொரு நபருக்கும் நியாயமான காலத்திற்குள் சேவைகளை வழங்குதல் மற்றும் பாரபட்சமற்ற அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவையும் USO களின் ஒரு பகுதி என்று அறிக்கையில் கூறியுள்ளது.


68 responses to “கடுமையாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *