சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை நடத்த கைகோர்க்கும் டாடாவும், டி.வி.எஸ்ஸும் !


ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை மேற்கொண்டதை அடுத்து, சென்னை மறைமலைநகரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் நிலை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது, அங்கு வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார நிலை, மற்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளை நம்பி இருந்த பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களின் நிலை குறித்த கவலை பரவலாக எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், தனது டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்திக்காக இந்த தொழிற்சாலையை டாடா குழுமம் கையகப்படுத்தி நடத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது, ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இது குறித்து சில நாட்களுக்கு முன்னதாக சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையளிக்கும் விதமாக இப்போது டாடா மோட்டார்ஸ் மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த தொழில் வளாகத்தை மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பணிக்குப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *