ஸ்பைஸ் ஜெட்டின் புதிய வழித்தடங்கள் ! எந்த ஊருக்குப் போகலாம்?


பிரபல வான்வழிப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 28 இடங்களில் தனது சேவையை முழு கொள்ளளவுடன் நடத்திக் கொள்ளக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலங்களான ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களுக்கு புதிய சேவையை தனது குளிர்கால அட்டவணைப்படி நடத்த இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது, அத்துடன் பெங்களூரு _ புனே வழித்தடத்திலும், அகமதாபாத்-கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகருக்கு இரண்டு புதிய விமான சேவையை துவங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *