வலிமையாக வளரும் ITC நிறுவனம், பங்குகள் லாபம் தருமா?


ஐ டி சி இந்தியாவின் முதன்மையான தனியார் துறை நிறுவனங்களில் ஒன்று, இதன் மொத்த விற்பனை மதிப்பு ₹74,979 கோடி மற்றும் நிகர லாபம் ₹13,032 கோடி (31.03.2021 நிலவரப்படி), இந்நிறுவனம் சிகரெட், எஃப்எம்சிஜி, ஹோட்டல், பேக்கேஜிங், பேப்பர்-போர்ட்ஸ் & ஸ்பெஷாலிட்டி பேப்பர்கள் மற்றும் விவசாயம்-சார் வர்த்தகங்கள் ஆகிய பன்முகப்படுத்தப்பட்ட இருப்பை கொண்ட ஒரு வளரும் பெரும் நிறுவனம், சிலருக்கு, ஐ டி சி யின் கீழ் ‘ஐ டி சி இன்ஃபோடெக்’ என்று ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இயங்குவது புதிதாக இருக்கலாம்.

இந்த நிறுவனத்தின் 110 ஆவது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட்11, 2021 இல் அதன் தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் நடைபெற்றது.

ஐ டி சி நிறுவனத்தை பற்றி, அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வரும்  பொருளாதார நிபுணர் திரு ஆனந்த்  ஸ்ரீநிவாசன் அவர்கள் தெரிவித்த முக்கிய தகவல்கள்:

  • அதிக பணப்புழக்கம் கொண்ட நிறுவனம்.
  • இதில் பங்கு முதலீடு செய்வது, பாத்திரங்களில் முதலீடு செய்வதை போன்றது.
  • தொடர்ந்து ஈவுத்தொகை (டிவிடெண்ட்) செலுத்தும் நிறுவனம், பங்கு விலையும் அதிகரித்து நமது முதலீட்டிற்கு ஆதாயம் தரக்கூடியது.
  • அரசாங்கம் தொடர்ந்து இந்த பங்கை விற்பதினாலும் தற்சமயம் இந்த பங்கு விலை ஏற்றமில்லாமல் நிலையாக உள்ளது.
  • லாபத்தின் 85% தொகையை, ஈவுத்தொகையாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஈவுத் தொகையாக ஒரு பங்கிற்கு ரூ.8 முதல் ரூ.10 வரை இந்த வருடத்தில் கிடைக்கும்.
  • ஐ டி சி இன்ஃபோடெக் பற்றி நான் பெரிதும் பேசவில்லை என்றாலும், இந்த நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். மேலும் புதிய ஒப்பந்தங்கள் பெற்று வளர்ந்து வரும் ஒரு நிறுவனம்.
  • ஐ டி சி இன்ஃபோடெக், தனியாக பட்டியலிடப்பட்டால் தனிசிறப்புடன் பன்மடங்கு வளரக்கூடிய நிறுவனமாக உயரும்.
  • இதில் நான் முதலீடு செய்வதும் எனது விருப்பமாக இருக்கும்.
  • ஐ டி சி இன்ஃபோடெக், தனியாக பட்டியலிடப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் சஞ்சீவ் பூரி.
  • அதே போன்று, வருங்காலங்களில் எஃப்எம்சிஜி மற்றும் சிகரெட் தனி நிறுவனங்களாகவும், ஹோட்டல் தனியாகவும் பிரிக்கப்படலாம்.
  • எஃப்எம்சிஜியின் கீழ் பல்வேறு புதிய ப்ராண்டுகள் உருவாக உள்ளது.
  • நேரிடையான ஆன்லைன் வர்த்தகமும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் தொடர்ந்து சேவை வழங்க முடிந்ததை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • “STORI” என்ற பெயரில் மேலாண்மை ஒப்பந்த அடிப்படையில் “நவநாகரீக சிறு (பூட்டீக்) ஹோட்டல்கள்” அறிமுகப்படுத்தப்படும்”.

திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் இதுகுறித்து தெரிவித்த முழுமையான கருத்துகளை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *