உலகின் 2-வது மதிப்புமிக்க IT – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..!!


உலகளவில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறையில், டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக மாறியுள்ளது. அதே நேரத்தில் பிராண்ட் ஃபைனான்ஸ்படி, அக்சென்சர் உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான IT சேவைகள் பிராண்ட் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

IBM-ஐ பின்னுக்கு தள்ளிய TCS, Infosys:

இன்ஃபோஸிஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. TCS மற்றும் Infosys ஐபிஎம்ஐ இரண்டாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.  IBM-இன் பிராண்ட் மதிப்பு இப்போது $10.6 பில்லியனாக உள்ளது, இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் சரிவு மற்றும் 2020 முதல் 50 சதவீதம் சரிந்தது

பின்னுக்கு சென்ற பிற IT நிறுவனங்கள்:

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் தவிர, முதல் 25 ஐடி சேவை பிராண்டுகளில் விப்ரோ (7வது), எச்சிஎல் (8வது), டெக் மஹிந்திரா (15வது) மற்றும் எல்&டி இன்ஃபோடெக் (22வது) எனநான்கு இந்திய நிறுவனங்கள் உள்ளன.

TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய பிராண்டுகளின் சராசரி வளர்ச்சி 2020 ஆம் ஆண்டு முதல் பிராண்ட் ஃபைனான்ஸ் ஐடி சேவைகள் தரவரிசையில் 51 சதவிகிதம் ஆகும், அதே நேரத்தில் அமெரிக்க பிராண்டுகள் சராசரியாக 7 சதவிகிதம் சுருங்கியுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *