Policy-கள மாத்துது LIC.. LIC-ஐயே மாத்துறாரு மோடி ஜீ..!!


இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான (LIC) ஜீவன் அக்ஷய் VII மற்றும் புதிய ஜீவன் சாந்தி  ஆகிய  இரண்டு காப்பீட்டுக் கொள்கைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.   

வருடாந்திர திட்டங்களுக்கான விகிதம் மாற்றம்:

மேலும் ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும்,  திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. காப்பீட்டுத் திட்டங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கின்றன. 

பெண்கள், திருநங்கைகளுக்கான பாலிசி:

2021 டிசம்பரில், எல்ஐசி புதிய காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.  தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையான தன் ரேகா பாலிசி பெண்களுக்கு சிறப்பு பிரீமியம் விகிதங்களை அளிக்கும் அதேவேளையில், மூன்றாம் பாலினத்தவருக்கும் இது அனுமதிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை.  தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலத்தைப் பொறுத்து நுழைவதற்கான அதிகபட்ச வயது 35 வயது முதல் 55 ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் ஆயுள் காப்பீட்டு கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *