மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் – One Day CM Adani..!!


Reliance Industries நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தகுதியை பெற்றுள்ளார்.

கடந்த வார ஆசிய பணக்கார்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியும், அதானி குழுமத்தின் கௌதம் அதானியும், மார்க் ஸுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி முந்தினர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.  அதில், Reliance Industries நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உள்ளது.  

6 நாட்களுக்கு முன் முகேஷை முந்திய அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தற்போது 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.  அவரது நிகர சொத்து மதிப்பு 74.8-ஆக உள்ளது. 

3-வது இடத்தில் HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரும், 4-வது இடத்தில் ராதாகிஷன் தமானியும், 5-வது இடத்தில் சீரம் இண்ஸ்டிட்யூட் நிறுவனத் தலைவர் சைரஸ் பூனாவாலாவும் உள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *