விலை குறையும் Cooking Oil – குடும்பத்தலைவிகள் குஷி..!!


இறக்குமதி செய்யப்படும் கச்சா பாமாயில் எண்ணெய் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.  

இந்தவகையில், நடப்பு ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் கச்சா பாமாயில் எண்ணெய் மீதான வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, தற்போது 8.25 சதவீதமாக உள்ள கச்சா பாமாயில் இறக்குமதி மீதான வரி, 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு செம்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கச்சா சோயா-பீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி விதை எண்ணெய் ஆகியவற்றின் மீது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அடிப்படை சுங்க வரி நிவாரணம்  2.5% லிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.   இதுவும்  செப்டம்பர் இறுதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வேளாண் கட்டமைப்ப மற்றும் மேம்பாட்டு கூடுதல் வரியை 7.55%-லிருந்து 5%-மாக மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த நடவடிக்கையானது உள்நாட்டு சில்லறை விற்பனை விலைகளை குறைக்க உதவும்  என்றும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *