ABG-யின் வங்கி மோசடி – நிர்வாகிகளுக்கு Lookout நோட்டீஸ்..!!


நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள ABG Shipyard உரிமையாளர்களுக்கு எதிராக Lookout நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது.  இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.

ABG Shipyard நிறுவனம்:

குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்ட் , ஏபிஜி குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும்.  இது கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றன.   குஜராத்தில் தஹேஜ் மற்றும் சூரத்தில் கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் ஆவர்.

ABG Shipyard-ன் வங்கி மோசடி:

ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ  உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த நிறுவனம் வங்கிகளில் பெற்ற 23,000 கோடி பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கு இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி என்று கூறப்படுகிறது.  ஏப்ரல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2020-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், கூட்டமைப்பினுடைய பல்வேறு வங்கிகள் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் கணக்கை மோசடி என்று அறிவித்தன.  இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

வங்கியில் வாங்கிய கடனை அதன் வெளிநாட்டு துணை நிறுவனத்தில் பெரும் முதலீடுகள் செய்யப் பயன்படுத்தி உள்ளதாகவும்,  அதன் பெயரில் பெரும் சொத்துக்களை வாங்குவதற்கு நிதிகள் திருப்பி விடப்பட்டுள்ளதாக  சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ABG Shipyard நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *