வங்கி மோசடியில் ABG – CBI விசாரணை..!!


ABG Shipyard நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ரிஷி கமலேஷ் அகர்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ABG Shipyard-ன் வங்கி மோசடி:

ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ  உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இந்த வழக்கு இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி என்று கூறப்படுகிறது.  ஏப்ரல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2020-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், கூட்டமைப்பினுடைய பல்வேறு வங்கிகள் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் கணக்கை மோசடி என்று அறிவித்தன.  இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

வங்கி மோசடி-விசாரணை தொடக்கம்:

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மீறல், மற்றும் அதிகாரபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் அகர்வால், அதன் அப்போதைய நிர்வாக இயக்குனர் சந்தானம் முத்துசாமி , இயக்குனர்கள் அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால் மற்றும் ரவி விமல் நெவெடியா;  மற்றும் மற்றொரு நிறுவனமான ஏபிஜி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்க இயக்குனரகம் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக பணமோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.  இதற்கு இணையாக, அமலாக்க இயக்குனரகம் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக பணமோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. ABG Shipyard நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *