1 கோடியை எட்டிய CNG வாகன விற்பனை.. மாருதி சுசுகி மகிழ்ச்சி..!!


Maruti Suzuki தனது S-CNG வாகனங்கள் விற்பனை 1 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 

மாருதி நிறுவனம் ஒன்பது எஸ்-சிஎன்ஜி கார்களை வழங்குகிறது. இதில் வேகன் ஆர், ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, டிசையர், செலிரியோ, எர்டிகா, ஈகோ, டூர்-எஸ் மற்றும் சூப்பர் கேரி ஆகியவை தனிநபர் மற்றும் வணிகப் பிரிவில் உள்ளன.

நிறுவனம் S-CNG வாகனங்களை அதிகரிப்பதையும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இயற்கை எரிவாயு பங்கை தற்போது 6.2% இல் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 15% -ஆக உயர்த்துகிறது.

 மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு நிறுவனமாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான, சுத்தமான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை வழங்குவதே எங்கள் நோக்கம்.  அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 CNG நிலையங்களை அமைப்பதுதான் எங்கள் இலக்கு” என்று அவர் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *