உயரும் வங்கி வட்டி விகிதம்.. சரியும் பங்குச்சந்தை..!!


S&P BSE சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் இரண்டு நாட்களில் 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன.

உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் சீனாவில் கோவிட்-19 பயம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை கவலை கொள்ளச் செய்ததன் காரணமாகவே புள்ளிகள் குறைந்துள்னன.

30 ’பேக்’ சென்செக்ஸ் குறியீடு செவ்வாயன்று 388 புள்ளிகள் குறைந்து, இரண்டு நாட்களில் 871 புள்ளிகள் சரிந்தது.  என்எஸ்இ நிஃப்டி இன்று இன்ட்ரா-டே ஒப்பந்தங்களில் 17,462 ஆக குறைந்தது, இந்த வாரம் இதுவரை 254 புள்ளிகள் சரிந்தது.

இந்திய அரசுப் பத்திரங்களின் மீதான 10 ஆண்டு பத்திர ஈட்டுத் தொகை 7.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.35 சதவீதமாக இருக்கலாம். இது, இந்தியாவிற்கு சுலபமாக பணம் கொடுக்கும் நாட்கள் முடிந்து விட்டதை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *