புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்


டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார்.

தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகங்களிடம் இதுகுறித்து அவர் பேசினார்.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ350 விமானத்தின் முதல் தொகுதியை ஏர் இந்தியா வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் விமானம் ஏர்லைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன. எத்தனை A350 விமானங்கள் வாங்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

டாடா நிறுவனத்துடன் போயிங் மற்றும் ஏர்பஸ் எஸ்இ ஆகியவை புதிய விமானங்களை ஆர்டர் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏர் இந்தியா இணையதளத்தின்படி, விமான நிறுவனம் 18 போயிங் பி777, 4 போயிங் பி747 மற்றும் 27 போயிங் பி787 – என்று மொத்தம் 49 விமானங்களைக் கொண்டுள்ளது –


67 responses to “புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *