சில வாரங்களில் நிகராக 80 தைத் தொடும் டாலர் மதிப்பு


இந்திய ரூபாய் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகராக 80 தைத் தொடக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

ரூபாய் மதிப்பு 5%க்கு மேல் என்ற புதிய சாதனைக்கு சரிந்து டாலரின் மதிப்பை செவ்வாய்க்கிழமை 78.87 ஆக கூட்டியுள்ளது.

பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா-உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உள்பட பல காரணிகள் பணவீக்கத்தைத் தூண்டின. இந்தியா அதன் எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 85% இறக்குமதி செய்வதும்கூட டாலர் விலை ஏற்றம் பெறுவதற்குக் காரணங்களில் ஒன்று.

கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து 20.5 பில்லியன் டாலர்களை வெளியேற்றியுள்ளனர். அது ரூபாயின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியது என்று கூறினார்.

RBI மற்றும் அரசாங்கமானது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் வீழ்ச்சி குறித்து கவலை கொண்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அல்லது CAD, இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி கையிருப்பில் கணிசமான சரிவுக்கு RBI சந்தையில் தலையிட்டதும் ஒரு காரணம். பிப்ரவரி 25 முதல், கையிருப்பு $40.94 பில்லியன் குறைந்துள்ளது. சில நிபுணர்களும், ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பு குறைய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *