60,000 மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல்


ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் ஹோல்டிங் நிறுவனமான ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், அடுத்த மூன்று காலாண்டுகளில் 60,000 ஜூனியர் முதல் மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ளது. அவ்வாறு புதிதாக பணியமர்த்தப்பட்ட ஜூனியர் ஒருவருக்கான சம்பளம் மாதத்திற்கு ₹25,000 முதல் ₹30,000 வரை இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பண்டிகை காலத்தை மனதில் வைத்து பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது என்றும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தற்காலிக ஊழியர்களுடன் பணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வருவாய் அறிவிப்பின்படி, ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த காலாண்டில் 17,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைச் சேர்த்தது. டெல்லி, சண்டிகர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் பணியாளர்கள் சேர்க்கை நடந்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை வணிகமானது மகத்தான விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது, இதில் 150-200 மூத்த நிர்வாகிகளை பணியமர்த்துவதும், அவர்களுக்கு துணைத் தலைவர் மற்றும் அதற்கு மேல் பதவிகள் வழங்கப்படும் என்றும் ஊதியமாக ஆண்டுக்கு ரூ 1 கோடி வரை தரப்படலாம் என்றும் தெரிகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *