Manyawar IPO – பிப். 8 வரை திறப்பு..!!


இந்திய ஆடை நிறுவனமான வேதாந்த் ஃபேஷன்ஸ் (Manyavar) லிமிடெட் பொது வெளியீட்டின் மூலம் ரூ.3,149.19 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

திருமண ஆடைகளுக்கான முன்னணி நிறுவனம்:

திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஆடைப்பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்திய ஆடை நிறுவனம் வேதாந்த் ஃபேஷன் லிமிடெட். இது மான்யவர், மோஹே, மெபாஸ், மந்தன் மற்றும் ட்வாமேவ் போன்ற பல்வேறு புகழ் பெற்ற பிராண்டுகளை வைத்துள்ளது. 

இந்நிறுவனம்,  பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகள், மல்டி-பிராண்ட் அவுட்லெட்டுகள், பெரிய வடிவமைப்பு கடைகள்  மற்றும் அதன் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு உட்பட ஆன்லைன் தளங்கள் மூலம் செயல்படுகிறது.  

மேலும் அமெரிக்கா, கனடா,  மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்   உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தனது கடைகளை விரிவுபடுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

Manyawar IPO வெளியீடு:

பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்பட்ட இதன் பொதுப்பங்கு வெளியீடு, பிப்ரவரி 8-ம் தேதி(நாளை)யுடன் முடிவடைகிறது.  இதன் IPO விலை ஒரு பங்குக்கு 824-866 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.3,149.19 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் பங்குகள் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் ப்ரமோட்டர்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *