IPO விற்பனைக்கு LIC தயார் – செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்..!!


பொதுப்பங்குகளை வெளியிடவுள்ள LIC நிறுவனம் அதற்கான வரைவு அறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது.

பங்குகளை விற்கும் LIC:

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.  இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரைவு அறிக்கை தாக்கல்:

இந்த நிலையில், IPO-வுக்கான வரைவு அறிக்கையை பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. எல்ஐசியில் 100 சதவீத பங்குகள் அல்லது 632.49 கோடிக்கும் அதிகமான பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது.   ஒரு பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாக இருக்கிறது.

அதில், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  பொதுப்பங்கு வெளியீடு விதிகளின்படி, வெளியீட்டு அளவின் 5% வரை நிறுவன ஊழியர்களுக்கும், 10% வரை எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இதுகுறித்த விவரங்கள் அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை.

வணிக வங்கியாளர்கள் நியமனம்:

பங்குகளை விற்பனை செய்வதற்காக, கோடக் மஹிந்திரா கேபிடல், கோல்ட்மேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் நோமுரா ஃபைனான்சியல் அட்வைசரி அண்ட் செக்யூரிட்டிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 10 வணிக வங்கியாளர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *