Crypto Currency – விளம்பரங்களில் எச்சரிக்கை அவசியம்..!!


கிரிப்டோ கரன்சி(Crypto Currency) தொடர்பான விளம்பரங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல், எச்சரிக்கை குறித்த வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி பற்றிய  சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிரிப்டோ கரன்சி புதிய மற்றும் வளர்ந்து வரும் முதலீட்டு வழி என்பதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கையுடன் தொடருமாறு கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது  என்று ASCI தலைவர் சுபாஷ் காமத் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சி ஒழுங்காற்று அமைப்புகள் மூலம் அங்கீகரிக்கப்படாத முதலீடு என்றும், அத்தகைய முதலீடு அபாயம் நிறைந்தவை என்பதான எச்சரிக்கை வாசகங்கள் விளம்பரங்கிளல் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்கள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு, முந்தைய அனைத்து விளம்பரங்களும் பொது களத்தில் தோன்றக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) கேட்டு கொண்டுள்ளது.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *