800 பில்லியன் டாலர் திரட்டிய எட்டெக்.. பைஜு ரவீந்திரன் பங்களிப்பு..!!


எட்டெக் நிறுவனமான பைஜூஸ் சமீபத்திய நிதியுதவி சுற்றில் 800 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது.  எட்டெக் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரன் இதில் பாதி பங்களிப்பை அளித்துள்ளார். 

இந்த நிறுவனத்தில் 400 மில்லியன் டாலர் தனிப்பட்ட முதலீடு செய்த பிறகு, ரவீந்திரனின் பங்கு 22 சதவீதத்தில் இருந்து சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகவும் மதிப்புமிக்க எட்டெக் நிறுவனமான பைஜூஸ், உலகளாவிய சந்தைகளில் தனது வணிகத்தை விரிவுப்படுத்துவதிலும் , கையகப்படுத்துதல்ககளிலும் கவனம் செலுத்துகிறது.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒன்பது நிறுவனங்களை வாங்கியது. இந்த கையகப்படுத்தலுக்காக கடந்த பல மாதங்களில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *