விளக்கம் கேட்ட BSE .. – பங்கு நகர்வு குறித்து Paytm விளக்கம்..!!


பேடிஎம்மின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் தனது வணிக அடிப்படைகள் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள பேடிஎம், தங்கள் நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பங்குச் சந்தைகளுக்கு தேவையான அனைத்து வெளிப்பாடுகளையும் செய்துள்ளதாக கூறியது.

செவ்வாயன்று, பேடிஎம் பங்குகள் BSE-ல் 3.8% சரிந்து ரூ.543.90 ஆக இருந்தது. அதன் வெளியீட்டு விலையான ஒரு பங்கிற்கு ரூ.2,150-லிருந்து 75% குறைந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *