Flipkart.. Amazon-னுடன் போட்டி – 13.4 பில்லியன் டாலருடன் GeM சாதனை..!!


அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகால பொது கொள்முதல் இணையதளம் (GeM) 13.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த விற்பனை மதிப்பு (GMV) உடன், மெல்ல மெல்ல அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் வணிகங்களைப் பிடிக்கிறது.

 2020-ஆம் ஆண்டில், ஃபிளிப்கார்ட், மைந்த்ராவைத் தவிர்த்து, GMV – விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு – சுமார் 12.5 பில்லியன் டாலர். அதே சமயம் Myntra  2 பில்லியன் டாலரை  பெற்றுள்ளது. 

அரசாங்கம் வெளியிட்டுள்ளஅதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜிஎம்வி, 13 பில்லியன் டாலர் GMV மற்றும் 4 மில்லியனுக்கும் அதிகமான சப்ளையர்கள் மற்றும் 59,000-க்கும் அதிகமான வாங்குபவர்களுடன் உலகளவில் முதல் ஐந்து மின்-பொது கொள்முதல் அமைப்புகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது.

பல்வேறு மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்குவது அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 160 சதவீதம் உயர்ந்து, மார்ச் இறுதிக்குள் ரூ. 1 டிரில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் போர்ட்டலில் வாங்கப்பட்டன.  வாங்குவோர் ஆர்வத்தின் அதிகரிப்புக்கு போர்ட்டலின் அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் காரணமாக இருக்கலாம்.

நடப்பு நிதியாண்டில் (2021-22 அல்லது FY22) ஆர்டர்களின் எண்ணிக்கை 3.15 மில்லியனைத் தாண்டியுள்ளது. இது 22 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் உள்ளது.  2022-23ல் கொள்முதல் மதிப்பு ரூ.1.5 டிரில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 “GeM India ஒரே வருடத்தில் ரூ. 1 டிரில்லியன் ஆர்டர் மதிப்பை எட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.  ஜிஇஎம் இயங்குதளம் குறிப்பாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) மேம்படுத்துகிறது, ஆர்டர் மதிப்பில் 57 சதவீதம் எம்எஸ்எம்இ துறையில் இருந்து வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *