கோல் இந்தியா நிறுவனம் பற்றாக்குறையைத் தவிர்க்க அவசர நடவடிக்கை


நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறையைத் தவிர்க்க கோல் இந்தியா நிறுவனம் அவசர நடவடிக்கையாக நிலக்கரியை இறக்குமதி செய்ய ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் கூடும் என்று தெரிகிறது.

ஏனெனில் மின் தேவை அதிகரித்துள்ளதால், மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, 173 மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான இருப்பில் 35% மட்டுமே உள்ளது. மொத்தம் 84 மின் உற்பத்தி நிலையங்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே நிலக்கரி இருப்பு இருந்தன.

அக்டோபர் மாதம் மின்சார விநியோக நிறுவனங்கள் பருவமழைக்குத் தயாராகும் வகையில் போதுமான நிலக்கரியை இருப்பு வைக்கத் தவறினால் செப்டம்பர் மாதத்தில் இன்னும் பெரிய மின் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

“ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த விலையில் நிலக்கரியைப் பெறுவதே நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க திட்டம் ” என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோல் இந்தியாவின் ஆண்டு உற்பத்தி இலக்கு 651 மில்லியன் டன்னாக இருக்கும் நிலையில், நிலக்கரி வெளியேற்றம் 857 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் நிதியாண்டுக்குள் 1 பில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டுவது திட்டம்.

அரசு நடத்தும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (போசோகோ) தரவுகளின்படி, கடந்த திங்கட்கிழமை மின் உச்ச தேவை 201.79GW ஆக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு 8.12GW ஆக இருந்த நிலையில், திங்களன்று உச்சபட்ச பற்றாக்குறை 1.173GW ஆக இருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *