Smart Phone பயன்பாடு அதிகரிக்கும் – Deloitte தகவல்..!!


2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என  டெலாய்ட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது 100 கோடியை எட்டும் எனவும் டெலாய்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெலாய்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில், கைப்பேசி எனப்படும் Mobile Phone-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 120 கோடியாக இருந்ததாகவும், அதில் 75 கோடி பேர் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவோராக இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்கள் தயாரிப்பில் அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய நாடாக இருக்கும் என்றும்,  பாரத்நெட் திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களையும் ஃபைபர் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன் கிராமப்புறங்களில் இணையம் புதிய  உந்துதலைப் பெறும் என்று அந்த ஆய்வறிக்கை  தகவல் வெளியிட்டுள்ளது.

 5G அதிவேக கேமிங் ,  ரிமோட் ஹெல்த்கேர் போன்ற அதன் பல்வேறு பயன்பாடுகளின் காரணமாக வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொபைல் தொழில்நுட்பமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஸ்மார்ட்போன்களின் கூடுதல் ஏற்றுமதி 2026-க்குள் 135 மில்லியனாக (ஒட்டுமொத்தமாக) இருக்கும் என்று டெலாய்ட் கூறியது. 2022-2026 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள ஸ்மார்ட்போன்களின் மொத்த ஏற்றுமதி 1.7 பில்லியனை எட்டும் என்றும் இது சுமார் 250 பில்லியன் டாலர் சந்தையை உருவாக்குகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர் ஊக்கத்தொகை, கைபேசி உற்பத்தியை ஊக்குவிக்கும் என்றும் டெலாய்ட் கருதுகிறது.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *