BharatPe முறைகேடு புகார் – விரிவான விசாரணை தொடக்கம்..!!


ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு இயக்குநரகம், BharatPe மீதான விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த அக்டோபரில், பாரத்பே நிறுவனம் போலி விற்பனையாளர்களுக்கு விலைப்பட்டியல் வழங்கியதாகவும், இந்த போலி விற்பனையாளர்கள் BharatPe க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பிற சேவைகளை வழங்கினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.  

இந்த குற்ற்சாட்டு தொடர்பாக,    தொழில்முறை சேவை நிறுவனமான அல்வாரெஸ் மற்றும் மார்சல் ஆகியோரால் நடத்தப்பட்ட தணிக்கையானது இந்த போலி பரிவர்த்தனைகளை சுட்டிக்காட்டியுள்ளது. 

Nykaa-ன் ஐபிஓவுக்கு ஏலம் எடுக்க நிதியைப் பெற முடியாமல், Kotak Wealth Management-வுடன் அனீஷ் குரோவர் சட்டப்பூர்வ மோதலில் ஈடுபட்ட பிறகு, பாரத்பே தோல்வியின் பிடியில் உள்ளது.

தற்போதைய தணிக்கையில் அனீஷ் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் பில்களை உயர்த்தியதற்காகவும், போலி விற்பனையாளர்களுக்கு இன்வாய்ஸ்களை வழங்கியதற்காகவும் அவர்மீது மோசடி குற்றஞ்சாட்டி பாரத்பே நிறுவனம் கடந்த புதன்கிழமை அவரை பணிநீக்கம் செய்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *