கொடுக்குற சம்பளம் போதலைங்க..கூகுள் ஊழியர்கள் குமுறல்..!!


கூகுளில் பணியாற்றும் ஊழியர்கள் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்து உள்ளனர்.  

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.

Googlegeist என்ற சர்வே, கூகுள் நிறுவன ஊழியர்களிடம் ஆண்டுதோறும் நடத்தப்படும். ஊழியர்கள் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்ற விரும்புகின்றனரா என்பது உள்ளிட்ட தகவல்கள் நிர்வாகத்துக்கு தெரிய வரும்.

அதன்படி, கூகுள் நிறுவன ஊழியர்களிடம் நடத்தப்பட்ட Googlegeist சர்வேயில், அதன் பணியாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கூகுள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடுகளும் போதிய அளவில் இல்லை என்றும், இதனால் சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையும் ஊழியர்களிடையே குறைந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *