தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!


ஸ்டார்ட்அப் நிறுவனமான பேடிஎம்மின் பங்குகள் நவம்பர் சந்தையில் அறிமுகமானதில் இருந்து மேலும் சரிந்துள்ளது. அதன் விலை இலக்கை Macquarie Capital Securities (India) Pvt மேலும் குறைத்தது.

மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் பேடிஎம் பங்குகள் அதிகப்படியாக 1961.05 ரூபாய் அளவீட்டைப் பதிவு செய்தது. நேற்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 572.25 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One 97 Communications Ltd இன் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதைத் தடை செய்துள்ளது,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *