வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை.. Jet Aiways தகவல்..!!


வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்க ஜெட் ஏர்வேஸ் முன்னுரிமை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம்  செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அனுமதித்த  தீர்மானத் திட்டத்தின்படி, நிறுவனம் மார்ச் 22-ஆம் தேதிக்குள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (AOC) பெற வேண்டும்.

விமானங்களை குத்தகைக்கு விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், செயல்முறை நேரம் எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

எப்படி இருந்தாலும்,  காலக்கெடு நீட்டிப்புக்கும் விமானம் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு நீக்கம் செய்யப்பட்டதற்கும் அல்லது குத்தகைக்கான செலவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரவுள்ள 5 ஆண்டுகளில் 100 விமானங்களை உள் வாங்குவதற்கான திட்டங்களையும், ஆக்கிரமிப்பு விரிவாக்க உத்தியை பின்பற்றுவதையும் அது முன்னதாகவே சுட்டிக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *