ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!


I-Phone தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 1.5 கோடி ரூபாயை போனசாக அளித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம்  ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது. 

1 லட்சம் முதல் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை மதிப்பிலான ஆப்பிள் நிறுவனப் பங்குகளை இவ்வாறு ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஊழியர்கள் விலகுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.  கடந்த 12 மாதங்களில் பங்குகள் 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன

மேலும் Facebook-ன் Meta Platforms Inc. பொறியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை முடுக்கிவிட்டுள்ளது . மெட்டாவர்ஸ் வேலையில் அவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் போனஸ் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை டிசம்பரை விட குறைவாக உள்ளது என்று விஷயத்தை அறிந்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *