நாங்க வந்துட்டோம்னு சொல்லு.. மே 4-ல் எல்ஐசி ஐபிஓ Confirm..!?


LIC-யின் பொதுப்பங்கு விற்பனை  மே மாதம் 4-ம் தேதி முதல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்குகளை விற்கும் LIC:

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.  இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. எல்ஐசி விண்ணப்பித்த 22 நாட்களிலேயே செபி அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது எல்ஐசி ஐபிஓக்கன் விற்பனை மே 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LIC-யின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விலக்கிக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்ற, இறக்கமான நம்பகத்தன்மையற்ற சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எல்ஐசி ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடம் பெரிதும் ஆர்வம் காணப்படவில்லை. இதையடுத்து, 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விலக்கிக் கொள்ள எல்ஐசி இயக்குநர்கள் கு) கூட்டத்தில் நேற்று(25.03.2022-திங்கள்) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *