மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!


Mahindra & Mahindra நிறுவனம் இந்தியாவில், XUV300 என்ற Electric காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

எரிபொருள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது அனைவரும் Electric இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விரும்ப தொடங்கியுள்ளனர்.

EV தயாரிப்பில் Mahindra & Mahindra:

இந்த நிலையில்தான், Mahindra & Mahindra நிறுவனமும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.  அதன்படி, XUV300 Electric கார் 2023-ம் ஆண்டின் 3-வது அல்லது 4-வது காலாண்டில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

2020-ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில்  Mahindra-வின் XUV300 கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காரில், 130HP ஆற்றலை செலுத்தக் கூடியதான மின்சார மோட்டாரும், 40kwh பேட்டரியுடன் இருந்தது. இந்த காரின் உற்பத்தி பணிகள் இன்னமும் தொடங்கப்படாத நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில்  ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.  இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.

Mahindra-வின் XUV300 கார் எலக்ட்ரிக் கார் டாடாவின் நெக்சான் EV, எம்ஜியின் ZS EV, ஹுண்டாய் நிறுவனத்தின் கோனா EV உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *