Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!


Air Indiaவை வாங்கிய  Tata Sons:

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, ஏர் இந்தியாவை டாடா குழுமம் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மொத்தப் பணத்தில் 2 ஆயிரத்து 700 கோடியை ரொக்கப் பணமாக கொடுத்த டாடா குழுமம், மீதமுள்ள 15 ஆயிரத்து 300 கோடிக்கு ஏர் இந்தியாவின் கடன்களை ஏற்று கொள்ளவும் டாடா குழுமம் ஒத்து கொண்டுள்ளது.  அதனை தொடர்ந்து பிப்ரவரி ஜனவரி 27-ம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

Ilker Ayci நியமனம்:

இந்தியா இந்நிலையில், பிப்ரவரி 14-ம் தேதியன்று Tata Sons நிறுவனத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், Ratan Tata. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் Ilker Ayci-யை நியமித்துள்ளதாக  Tata Sons நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். இல்கர் அய்சி, இதற்கு முன்பாக துருக்கி விமான நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் உள்ளதாகவும், அதனால் அவர் ஏர் இந்தியாவை திறம்பட நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *