பங்கு வெளியிடும் ருச்சி சோயா.. – ருசிக்க நீங்க தயாரா..!?


ருச்சி சோயா இன்டஸ்டீரிஸ் நிறுவனம் மார்ச் 24-ம் தேதி(நாளை) பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

ருச்சி சோயா இன்டஸ்டீரிஸ் நிறுவனம் ருச்சி கோல்ட் சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ருச்சி சோயா நிறுவனம்  பங்குகளை வெளியிட இருக்கிறது.

அதன்படி, அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையை 616 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை நிர்ணயித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகபட்ச விலை நிர்ணயித்தில் 19 சதவீத பங்குகளும், குறைந்தபட்ச விலையில் 18 சதவீத பங்குகளும் தொடர் வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 25% பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற விதியின்படி, 6-7 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  

தொடர் பங்கு வெளியீடு வாயிலாக 4 ஆயிரத்து 300 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தில்  ரூ.3,300-ஐ கடன்களை திருப்பி செலுத்துவதற்கும், மீதமுள்ள தொகை நிறுவனங்களின் பிற செலவினங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என ருச்சி சோயா இன்டஸ்டீரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த விதிமுறையை நிறைவு செய்ய வேண்டும் என செபி காலக்கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *