ஆகாசத்தில் Akasa Air..பறக்க தயாரான பட்ஜெட் விமானம்….!!


Akasa Air விமானம் வரும் ஜுன் மாதம் தனது முதல் சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.

30 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 250 கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ள, ஆகாசா ஏர் நிறுவனத்தில் 40 சதவீத பங்குகள் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவிடம் உள்ளன. இந்நிறுவனம் தொடங்குவதற்கு 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், வரும் ஜுன் மாதம் முதல் ஆகாசா ஏர் நிறுவன விமானங்கள் முதல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான அனைத்து உரிமங்களையும்  பெற முயற்சி செய்து வருவதாகவும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார். ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்ட 12 மாதங்களுக்குள் 18 விமானங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை வைத்திருக்கும் என்று ஹைதராபாத்தில் நடந்த விமான கண்காட்சியில் துபே கூறினார்..

டாடா இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற இந்திய விமான நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆகாசா ஏர், கடந்த ஆண்டு நவம்பரில், கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 72 போயிங் 737 மேக்ஸ் ஜெட் விமானங்களுக்கு ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *