இருப்பை வலுப்படுத்த முயற்சி.. ரெனால்ட் முன்பதிவு மையங்கள் திறப்பு..!!


நாடு முழுவதும் 300 முன்பதிவு மையங்களைத் திறந்துள்ளதாக ரெனால்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த  முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் கூறியுள்ளது.  

CSC e-Governance Services India Ltd (CSC-SPV) இன் துணை நிறுவனமான CSC Grameen e-Stores  உடன் இணைந்து இந்த முன்முயற்சியின் மூலம், அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் ரெனால்ட் மாடலை குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 ரெனால்ட் முன்பதிவு மையங்கள் வாடிக்கையாளர் தகவல் மையமாகவும் செயல்படும் என்றும், தயாரிப்பு, அதன் அம்சங்கள், விலை வரம்பு, நிதி திட்டங்கள் மற்றும் அந்த நேரத்தில் பொருந்தும் சலுகைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும் என அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *