மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!


வோடபோன் ஐடியா (Vi) 2022 -ஆம் ஆண்டில் மற்றொரு கட்டண உயர்வுக்கு செல்லக்கூடும் என்று தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ரவீந்தர் தக்கர் திங்களன்று நிபுணர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்,

இரண்டு ஆண்டுகளில் உயர்ந்த கட்டணம்:

வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும்  அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு காலாண்டுகளில், நுழைவு-நிலை ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை ரூ.49 முதல் ரூ.79 ஆக உயர்த்தியது மற்றும் சில்லறை மற்றும் நிறுவனப் பிரிவுகளில் குறிப்பிட்ட சில போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை அதிகரித்தது.

நஷ்டத்தில் வோடாஃபோன் ஐடியா நிறுவனம்:

வோடபோன் ஐடியாவின் நஷ்டம் டிசம்பர் காலாண்டில் விரிவடைந்தது, முந்தைய காலாண்டில் ரூ.7,132.3 கோடியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த மூன்று மாதங்களில் இழப்பு ரூ.7,230.9 கோடியாக இருந்தது,

அதே சமயம் வருவாய் ரூ.9,406 கோடியிலிருந்து 3% அதிகரித்து ரூ.9,717 கோடியாக அதிகரித்துள்ளது.  முந்தைய ஆண்டில், நிறுவனம் ரூ.10,894 வருவாயில் ரூ.4,532 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. கட்டண உயர்வின் தாக்கம் மார்ச் 2022 முடிய உள்ள காலாண்டிலும் அடுத்த காலாண்டிலும் காணப்படும் என்று டக்கர் கூறினார்.

கடன் சுமையில் உள்ள வோடபோன் இந்தியா, அதன் நிகரக் கடனை டிசம்பர் 31 -ஆம் தேதி வரை ரூ 1.97 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.  இது முந்தைய ஆண்டின் காலப்பகுதியில் ரூ.1.94 டிரில்லியன் ஆகும்.

டிசம்பர் காலாண்டில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ. 1.99 டிரில்லியனாக அதிகரித்தது, இதில் ரூ.1.1 டிரில்லியன் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணம் தொடர்பானவை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பரில் வோடபோன் இந்தியா கடைசியாக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தியது.  டிசம்பருடன் முடிந்த காலாண்டில்  4G வாடிக்கையாளர்களில் 0.8 மில்லியன் அதிகரிப்பைக் கண்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *