Russia எண்ணெய்க்கு தடை – ரஷ்யா எச்சரிக்கை..!!


ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான மேற்கத்திய தடை காரணமாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மாஸ்கோ எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது.  இதன் காரணமாக எண்ணெய் விலை 2008 –ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது.

ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயு குழாய் மூடப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி கடந்த மாதம் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு குழாய் எரிவாயு Nord Stream 2-இன் சான்றிதழை முடக்கியது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கான தண்டனையாக ரஷ்ய பொருளாதாரம், வங்கி அமைப்பு மற்றும் நாணயம் ஆகியவை கடுமையான வீழ்ச்சியில் உள்ளன. 

அத்துடன் மோதல் தொடங்கியதில் இருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மத்திய ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *